குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, புரட்டாசி(கன்னி) 21 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின் அவதூறு, அதிகாரம், ஆதிக்கம்,

அழிவு அரசியல்!! – கருணாகரன்-24.01.2049- 05, 06.02. 2018 -யாழ்ப்பாணத்தில் மைத்திரி உறுதிமொழி! -யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் கடையொன்றின் முன்னால் நின்று, சமகால அரசியல் நிலைவரத்தைப் பற்றி நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கடைக்காரார் சொன்னார், “தயவு செய்து இதில (கடைக்கு முன்னால்) நிண்டு அரசியல் கதைக்க வேண்டாம்.

 

இந்தக் கடையில நிண்டுதான் தங்களை விமர்சித்ததெண்டு பிரச்சினைக்கு வருவாங்கள். வெளிப்படையாக எதைப்பற்றியும் கதைக்கேலாது. அந்தளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கு” என்று.

அங்கே நின்ற நண்பர் கடைக்காரரிடம் கேட்டார், “அரசியல் எண்டால் விமர்சனமும் இருக்கும். அதுவும் தேர்தல் காலத்தில இது இன்னும் கூடுதலாக இருக்கும்.

பொதுப் பணி எண்டு வாறவைக்கு இதையெல்லாம் விளங்கிக் கொள்ளக்கூடிய பக்குவமும் அறிவும் வேணும். அதில்லாமல் ஏன் அரசியலுக்கு வருகினம்?” என.

”நீங்கள் சொல்றது எனக்கும் விளங்கும். ஆனால், விளங்க வேண்டிய ஆட்களுக்கு இது விளங்குதில்லையே.

சரிபிழையைப் பற்றி இப்ப ஆரோட கதைக்கேலும்? நியாயத்தைச் சொல்றதுக்கோ ஒண்டைப்பற்றிக் கேள்வி கேட்கிறதுக்கோ முடியாது.

தாங்கள் சொல்றதை அப்படியே நாங்கள் கேட்க வேணும். மறு பேச்சுப் பேசக்கூடாது. பேசினால் தங்களுக்கு எதிரான ஆள். எதிரி. துரோகி இப்பிடியே சொல்லிக் கொண்டுபோய் தேவையில்லாத பிரச்சினைகளையெல்லாம் உருவாக்குவான்கள்.

நீ அவற்றை ஆள். இவர் இவற்றை ஆள். அவர் அப்பிடி. இவர் இப்பிடி எண்டு எந்தப் பொறுப்புமில்லாமல் அங்கயுமிங்கயுமாகக் கோர்த்து விடுவான்கள்.

இதெல்லாம் பிறகு தேவையில்லாத பிரச்சினையாகீடும்…. என்ர இந்தத் தொழிலுக்கும் ஆபத்து. அதுதான் சொன்னன், இந்தக் கதைகளும் வேண்டாம்.

கரைச்சலும் வேண்டாம் எண்டு. ஏன், உங்களுக்கும்கூட இதைப்பற்றித் தெரியுந்தானே” என்று சொன்னார் கடைக்காரர்.

அதற்கு மேல் நண்பர், கடைக்காரருடன் பேச விரும்பவில்லை. இவ்வளவுக்கும் கடைக்காரரும் நண்பரும் நீண்ட கால நண்பர்கள். ஆளையாள் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்.

ஆனால், சூழல் மாறியிருப்பதால் நண்பர் அதற்குமேல் கடைக்காரரோடு பேச விரும்பவில்லை.

”இருந்தாலும் கடைக்காரரிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்பினார். “இப்பதான் ஆமி, துவக்கு, இயக்கம், அரசாங்கம், அதோட நிக்கிற ஆட்கள், குழுக்கள் எண்ட பிரச்சினையெல்லாம் இல்லையே! இப்ப நீங்கள் ஆருக்குப் பயப்பிட வேணும்?”

கடைக்காரர் நிமிர்ந்து நண்பரைப் பார்த்தார். நல்லவேளையாக அந்தப் பார்வையில் நண்பர் எரிந்து விடாமல் தப்பித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90  தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் 62

“ஆமி, துவக்கு, ஆயுதக்குழு எண்டிருந்தால்தான் பிரச்சினையா? இப்ப ஆர் அதிகாரத்தில இருக்கிறதெண்டு தெரியுந்தானே…!” கடைக்காரர் குறிப்பிட்டது, தமிழரசுக் கட்சியினரையே.

அந்தப் பகுதியில் நடந்த கூட்டங்களில் தமிழரசுக் கட்சியினர் பேசிய பேச்சுகள் எல்லாமே மற்றத்தரப்பினரை மதிப்பிறக்கும் செய்யும் விதமாகவே இருக்கின்றன.”

“ஏன் இப்பிடி மற்றவையைப் பற்றித் தூத்திக் கட்டவேணும்? தாங்கள் என்ன செய்தனாங்கள், இனி என்ன செய்யப்போறம் எண்டதைப் பற்றிச் சொல்ல வேண்டியதுதானே..!” என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருத்தர் பக்கத்திலே நின்ற ஒருவரிடம் கேட்டிருக்கிறார்.

அந்தக் கதை எப்படியோ தமிழரசுக் கட்சி வட்டாரங்களுக்கு எட்டி விட்டது. அடுத்தநாள் அவரை நான்கைந்துபேர் வழியில் மறித்து, “நீ எவ்வளவு காசு வாங்கிக் கொண்டு அவங்களுக்காக வாயடிக்கிறாய்?” என்று கேட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.

தாக்குதலுக்குள்ளானவருக்கு தான் யாரிடம் பணம் வாங்கினேன் என்பதோ யாருடைய கதையைக் கேட்டுத் தான் கதைத்தேன் என்பதோ புரியவேயில்லை. ஏனென்றால், அப்படியொன்று நடக்கவேயில்லை.

கேள்வி கேட்பது, விமர்சனம் செய்வது போன்றவை எல்லாம் ஒருவருடைய சொந்தப் புத்தியிலிருந்து வருவதில்லை என்பதே சிலருடைய எண்ணம்.

இதெல்லாம் பின்னணியிலிருந்து யாரோ தூண்டுவதால்தான் நடக்கின்றன என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் அபிப்பிராயங்களைச் சொல்வோரையும் விமர்சிப்போரையும் கேள்வி கேட்கின்றவர்களையும் பிற சக்திகளோடு தொடுத்துச் சோடிக்க முற்படுகிறார்கள்.

உண்மையில் இதுவொரு ஆபத்தான போக்கு. இத்தகைய போக்கின் பிதாமகராகப் பலரும் அமிர்தலிங்கத்தையும் அவருடைய காலத்துத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சொல்வதுண்டு.

தமது அரசியல் எதிராளர்களை அல்லது மாற்று அரசியலாளர்களை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்துரோகிகளாகக் கட்டமைக்கும் உத்தியை உருவாக்கியது அமிர்தலிங்கம் அன்ட் கொம்பனியே.

தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் pirabakaran1யாழ் மாநகரசபை மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது பிரபாகரனாக இருந்தாலும் அதற்கான தூண்டுவிசையாக இருந்தது அமிர்தலிங்கம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது அபிப்பிராயம்.

இதே அணுகுமுறையே – உத்தியே – இன்றைய தமிழரசுக் கட்சியிடத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் இளைய தலைமுறையினரிடத்தில்.

அதாவது தமிழரசுக் கட்சியின் வருங்காலத் தலைவர்களிடத்தில். தற்போது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் மிக மோசமான முறையில் எதிர்த்தரப்பினரைச் சாடுகிறார்கள்.

இதில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம். இவர்கள், கண்ணியமற்ற முறையில், நாகரிகமற்ற விதமாக எதிர்த்தரப்பின் மீது வசைகளை அள்ளி வீசுகிறார்கள்.

தமது கொள்கை என்ன? அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? அதன் சாத்தியப்பாடுகள் என்ன? கடந்த காலச் சாதனைகள் என்ன? சமகால நெருக்கடிகள் என்ன? அதைத் தீர்ப்பதற்கான தமது திட்டங்களும் பொறிமுறைகளும் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு விட்டு, மற்றவர்களைப் பற்றிய வசைகளையே அள்ளி வீசுகிறார்கள்.

அப்படிப் பேசினால்தான் கூட்டம் சேரும். கவனத்தைப் பெறலாம். அதோடு எதிர்த்தரப்புகளையும் அடக்கிப் பலவீனப்படுத்திவிட முடியும். இதுவே தமது பலமாகும் என எண்ணுகிறார்கள்.

பொதுக்கூட்டங்களில் பலருக்கு முன்னிலையில் இவ்வாறு தரக்குறைவாக எந்தக் கூச்சமும் இல்லாமல் பேசுவதற்கும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை எழுதுவதற்கும் எவ்வளவு திராணி வேணும்?

தம்மைப் பற்றிய சமூகத்தின் கணிப்பு எப்படி அமையும் என்றெல்லாம் இவர்கள் ஒரு கணமேனும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

இதை ஊடகங்களோ, கட்சியின் மூத்த தலைவர்களோ, மக்கள் தரப்பிலிருந்து எவருமோ சுட்டிக் காட்டுவதையும் காணவில்லை. யாரும் தட்டிக் கேட்பதாகவும் தெரியவில்லை. அப்படியென்றால், இது எங்கே போய் முடியப்போகிறது?

அண்மையில் பரந்தனில் ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதனுடைய வீடியோக் காணொளியைப் பார்த்தேன்.

அதிலே இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு வேட்பாளர், தமக்கு எதிரான அரசியல் தரப்பினரை மிகக் கீழான சொற்களால் வசைபாடிக் கொண்டிருந்தார்.

எதிர்த்தரப்பினரின் அரசியல் குறைபாடுகளையும் அந்தத் தரப்பின் நடைமுறைத் தவறுகளையும் மக்களுக்குச் சுட்டிக்காட்டலாம். அப்படிச் செய்வதே நியாயம்.

தவறு. பிழை. ஆனால், இதை அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட மூத்த தலைவர்கள் பலரும் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

ஏன் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்மந்தனும் அதே மேடையில் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். (ரசித்துக் கொண்டேயிருந்தார்).

பரந்தனில் மட்டுமல்ல, இந்த மாதிரியான ஒரு போக்கை நாம் பல இடங்களிலும் அவதானிக்கலாம்.

மூத்த தலைவர்களான மாவை சேனாதிராயா, சம்மந்தன் போன்றவர்கள் நேரடியாக எந்தத் தரப்பையும் விமர்சிக்கமாட்டார்கள்.

வெளிப்படையாக யாரையும் அவர்கள் குற்றம் சாட்டவும் மாட்டார்கள். இதன் மூலம் தாம் கண்ணியமான அரசியல் நெறிமுறையொன்றைப் பின்பற்றுகின்றவர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள். முன்னர் அரசாங்கத்தை விமர்சித்தனர். இப்பொழுது அதுவும் இல்லை.

ஆனால், ஏனையவர்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் இதற்கு மாறாக, வேண்டிய அளவுக்குத் திகட்டத் திகட்ட பிற தரப்புகளை இழிவு படுத்துவார்கள்.

தேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம்!! : தமிழரசுக் கட்சியினரின்  அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்!!   -   கருணாகரன் sumanthiran STF

இது ஒரு திட்டமிட்டுச் செயற்படுத்தப்படும் ஒரு உபாயமே. கண்ணியமான முறையில் அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும் என விரும்புவோருக்குத் தலைவர்களும் எதிராளிகளைத் தாக்கி அவர்களைப் பலவீனப்படுத்த வேண்டும் எனக் கருதுவோருக்கு இளைய தலைமுறையினரும் ஒரே களத்தில் செயற்படுகின்றனர்.

இரண்டுமே ஆயுதங்கள்தான். இதன் உண்மையான நோக்கமே பிறரைக் கீழிறக்கித் தோற்கடிப்பதேயாகும். சனங்களுக்கும் இது கிளுகிளுப்பூட்டும் ஒரு செயலாகும்.

பிறரைப் பற்றிக் கீழ் விமர்சனம் செய்வதை ரசிப்பது தமிழ்ச்சூழலில் அதிக ஈர்ப்புள்ள விசயம். வேலியால் புதினம் பார்ப்பது தொடக்கம் இவ்வாறான அவதூறுகளை ரசிப்பது, விரும்பிப்படிப்பது எல்லாம் பலருக்கும் ருசியான ஒன்று.

முகநூல் தொடக்கம் இத்தகைய இணையத்தள வாசிப்புகள் வரையிலும் இதை நாம் காண முடியும். இவ்வாறான கூட்டங்களுக்குச் சேருகிற கூட்டம், அங்கே கைதட்டி, விசிலடித்து ஆரவாரிப்பது வரையில் இதை நாம் அவதானிக்கலாம்.

ஆகவே இதுவொரு சமூக உளவியல் நோயாகப் பரவியுள்ளது. இதையே இவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர்.

இதன் பின்னே ஒரு அதிகாரத்துவம் நிலைகொள்கிறது. இத்தகைய இழிநிலை வெளிப்பாடுகளைக் கண்டித்தாலோ மறுத்துரைத்தாலோ உடனே இவர்கள் அணியாகச் சேர்ந்து கொண்டு கீழ்த்தாக்குதலைத் தொடுக்கிறார்கள்.

வசைபாடுவார்கள். அப்படிச் செய்து எதிர்த்தரப்பினரையும் – நியாயத்தைப் பேச முனைவோரையும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர்.

அல்லது தனிமைப்படுத்தி ஓரங்கட்டி விடுகின்றனர். ஆகவே இங்கே ஒருவிதமான அதிகாரம், ஆதிக்கம் நிலைப்படுத்தப்படுகிறது. இவர்களுடைய நோக்கமும் அதுதான்.

எனவே இத்தகைய ஒரு அணுகுமுறையின் மூலமாக வடக்கிலே அரசியல் அச்சுறுத்தல் மிகப் பயங்கரமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆயுதம், படைகள், அரசு, அதனுடைய அனுசரணையாளர்கள் என்பதற்கு அப்பால், அவதூறு, மிரட்டல், அதிகாரப் பிரயோகம், ஆதிக்கம் போன்றவற்றினால் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதெல்லாம் அநேகமாகத் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் சில தரப்பினரால்தான் நடக்கின்றன. இதற்கு முதல் இந்த மாதிரியான காரணங்களைக் குற்றச்சாட்டாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிற தரப்புகளின் மீது அடுக்கியது.

குறிப்பாக, அரசு, ஈ.பி.டி.பி போன்ற சக்திகளின் மீது. இப்பொழுது அதே குற்றச்சாட்டுகளுக்குத் தானே காரணமாகியுள்ளது.

இதனால்தான் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டங்கள் பாதுகாப்புப் படைகளின் பிரசன்னத்தோடு (இராணுவப் பாதுகாப்போடு) நடத்தப்பட வேண்டியதாகியது.

கூட்டங்களுக்கு வருகின்றவர்களையே சோதனையிடும் நிலையும் வந்தது. சனங்களிடமிருந்து அந்நியப்படுவதும் வரலாற்றிலிருந்து விலகிச் செல்வதும் அதிகாரமனோ நிலையின் விளைவேயாகும்.

மக்களுக்கு விசுவாசமில்லாத அரசியல் என்பது மக்களுக்கு மட்டும் விரோதமாக இருப்பதில்லை. அத்தகைய அரசியலை முன்னெடுக்கும் அரசியல் சக்திக்கும் விரோதமாகவே அமைவதுண்டு. இதுவே வரலாற்றனுபவமாகும்.

– கருணாகரன்

நிலாந்தனின் எண்ணங்கள்.

அதற்கு முன்னரும், பின்னரும் நடந்த அது போன்ற கூட்டங்கள் எதிலும் மைதானத்தின் வாசலில் வைத்து பொலிசார் மக்களை கைகளைத் தூக்கியபடி நிற்கவைத்து சோதனை செய்யவில்லை. அது இறுதிக்கட்ட யுத்தம் நடந்த பகுதி என்பதினால் அங்கிருந்து வன்முறை கலந்த எதிர்ப்பு ஏதும் வரக்கூடும் என்று எதிர்பார்த்து அப்படியொரு சோதனை செய்யப்பட்டதா?

கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டில் ஆகப்பெரிய ஆதரவுக் கூட்டமொன்றை திரட்டிக்காட்ட வேண்டும் என்று சிந்தித்த கூட்டமைப்பினர் அப் பிரதேச மக்களை அவமதித்துமிருக்கிறார்கள். பலத்தைக் காட்டுவதற்கு கடைசி யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்துண்டு தேவை. அதே சமயம் பாதுகாப்பு என்று வரும்பொழுது அந்த மக்களை அவமானகரமான விதத்தில் சோதனை செய்யவும் வேண்டும். தனது வாக்காளர்களை அல்லது ஆதரவாளர்களை அல்லது பார்வையாளர்களை பொலிசாரை வைத்து சோதனை செய்தமை என்பது அவர்களைக் கூட்டமைப்பு நம்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அல்லது கூட்டமைப்பினர் அதிகம் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறதா? யாரிடமிருந்து யாரைப் பாதுகாப்பதற்காக யாரைச் சோதனை செய்வது?

யாழ்ப்பாணத்தில் மைத்திரி உறுதிமொழி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சிங்களவர்களுக்கானது அல்ல, அது நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது, நாட்டில் மக்களின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் நண்பன் சொந்தக்காரன் என்று பாராமல் தண்டிக்கப்படுவர் என யாழ்ப்பாணத்தில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள, முசுலிம் என மூவின மக்களும் சேர்ந்து வாழ்வது எனது கனவு, எனது கனவினை நனவாக்க நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,3 ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலுக்காக மக்களை நாடிய எனக்கு இந்த வடக்கு மக்கள் பெரிய ஆதரவினை தந்திருந்தார்கள்.

வடக்கு பிரதேசத்தின் அரசியல் தலைவர்களும் எனக்கு ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சி என்பது சிங்கள மக்களுக்கான கட்சிய அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது, சுதந்திரக் கட்சி சிங்களவர்களின் கட்சி என்றால் இன்று வடக்கில் தமிழ் வேட்பாளர்களை சுதந்திரக்கட்சி முன்னிறுத்தியிருக்காது.

1960ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, இப்பகுதி பெண்கள் தங்களது தலைமுடியை நிலத்தில் படும்படி விரித்து அதில் நடந்து செல்லுமாறு சிறிமாவோ பண்டாரநாயக்கவை கோரியிருந்தனர்.

ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார், அந்தளவு இந்த மக்கள் சுதந்திரக் கட்சி மீது மரியாதை வைத்துள்ளனர்.

அதே போல 1982ஆம் ஆண்டு கொப்பேகடுவ அவர்கள் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போது அதற்கு வடக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் சுதந்திரக் கட்சியின் செயலாளர்களாக செயற்பட 3 தமிழர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

சுதந்திரக்கட்சி என்றும் இன, மத, பேதங்களை பார்த்து செயற்படும் கட்சியல்ல, இது மக்களின் கட்சி.

முன்னாள் சனாதிபதி மகிந்த ராயபக்சவின் ஆட்சிக்காலத்திலும், போர் நிறைவடைந்த காலத்திலும் வடக்கில் காணாமல் போதல்கள், காணி சுவீகரிப்புக்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், பலர் நாட்டை விட்டுத் தப்பி ஓடுதல் என்பன பல இடம்பெற்றன.

இதன்காரணமாக உலகமே, இலங்கையின் மீது கடும் கோபம் கொண்டது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை, ஊடகவியலாளர்கள் கொல்லப்படவில்லை, யாரும் நாட்டை விட்டு ஓடவும் இல்லை, அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் நாம் கரிசனையாய் இருக்கின்றோம்.

வடக்கிற்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் 100இற்கு 60 சதவீதம் திருப்பி அனுப்பப்படுகின்றது, ஆனால் இனி வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாமல், தேர்தலுக்கு பின்னர் நீங்கள் தெரிவு செய்யும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.