குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு மற்றுமொரு சான்று. 3.85.000 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு!

22.01.2049-04.02.2018- சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 ஆண்டுகள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை வைத்து ஆராய்ந்த போது. இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே தோன்றி, வளர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மானுடவியலாளர்கள் தெற்காசிய பகுதியில் வாழும் மக்கள், ஆப்ரிக்காவில் தோன்றி அங்கிருந்து, இங்கே புலம்பெயர்ந்தவர்கள் என்றே கூறியும், நம்பியும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் நம்பிக்கை! மனிதன் முதலில் எங்கே தோன்றினான் என்ற கேள்விக்கு, பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியார்கள், பொதுமக்கள் நம்பி வந்த பொது கருத்தானது ஆப்ரிக்கா என்பது தான். இதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் என பலவன இருந்தன. ஏனெனில், நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் மனிதர்கள் தோன்றியதன் ஆதாரம் இருந்தது. எனவே, அங்கிருந்தே மனிதர்கள் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய கண்டத்திற்கு புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. Image Source: commons.wikimedia சமீபத்திய கண்டுபிடிப்பு! ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அதிரம்பாக்கம் என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் 3 இலட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், தமிழர்கள், இந்தியர்கள் ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, அவர்கள் இங்கேயே தோன்றியவர்கள் என்பது உறுதி ஆகியுள்ளது. Image Source: wikipedia மானுடவியலாளர்களால்... இதனால் இத்தனை நாட்களாக மானுடவியலாளர்களால் நம்பப்பட்டு வந்த நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது. ஆகவே, தெற்காசியா, இந்தியாவில் வாழும் மக்களானவர்கள் இங்கேயே தோன்றி, அக்காலத்திலேயே அதிநவீன கருவிகள் உருவாக்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்றும். இவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் இல்லை என்றும் மானுடவியலாளர்களால் கருத்து தெரிவித்துள்ளனர். Image Source: wikipedia கல் கருவிகள்! சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கள் வெறும் கற்கள் அல்ல. அவை பல வேலைகளுக்கு கருவியாக பயன்படுத்த அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் உருவாக்கிய கல் கருவிகள். கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்களின் வயதானது 3.85 .000 இலட்சம்ள்ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இதை வைத்து காணும் போது மனிதர்களின் தோற்றம் இங்கே உதயமாகியிருக்கலாம் என்றும் கருத வைக்கிறது. Image Source: wikipedia 7200! அதிரம்பாக்கத்தில் இத்தைகைய கற்கள் 7200 என்ற எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானுடவியலாளர்கள், இந்த கற்கள் கத்தி போன்ற கூர்மையான கருவிகள் போன்று இருக்கின்றன என்றும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவினுள் 1.25 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் தான் வந்ததாக கருதப்பட்டது. Image Source: commons.wikimedia எங்கே? எப்போது? இதுநாள் வரை இந்த தொழில்நுட்பம் ஆப்ரிக்காவில் 4.5 - 3.2 இலட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டும், தெற்காசியாவிவில் 2.5 இலட்சம் ஆண்ளுடுகளுக்கு இடைப்பட்டும் தோன்றியதாக அறியப்பட்டு வந்தது. தற்போதைய ஆய்வை வைத்து பார்த்தால்... இதே தொழில்நுட்பம் இந்தியாவில் 3.85 இலட்சம் வருடங்களுக்கு முன்னரே தோன்றியிருப்பது உறுதி ஆகியிருக்கிறது. தனித்துவம்! இந்த ஆய்வின் மூலமாக ஆதி மனிதர்கள் ஆப்ரிக்காவில் இருந்து தெற்காசியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் இல்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் மக்கள் இங்கேயே சுதந்திரமாக தோன்றி வளர்ந்தவர்கள் என்பதற்கும் சான்றாக அமைந்துள்ளது. மானுடவியலாளர் யான் காக்! இந்தியாவின் கலாச்சாரமானது நெதர்லாந்து மற்றும் ஆப்ரிக்காவை ஒன்றிணைந்தது என்று விசுகான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மானுடவியலாளர் யான் காக் தி வெர்ய் என்ற இணையத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதிரம்பாக்கம்! அதிரம்பாக்கமானது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊராகும். இது இந்தியாவின் பழமையான இடமாகவும், அகழ்வாராய்ச்சி நடந்து வரும் இடமாகவும் இருந்து வருகிறது. அதிரம்பாக்கதை1863ல் ஆங்கிலேயே அகழ்வாராய்ச்சியாளர் ராபர்ட் ஃபூட் என்பவர் முதன் முதலில் கண்டுபிடித்தார். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அடிக்கடி இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இந்திய வரலாற்று தலம்! அதிரம்பாக்கம் எனும் இந்த இடமானது இந்திய வரலாற்றும் அப்பாற்பட்ட வரலாறு கொண்டுள்ளது. இந்த இடத்தில் கல் ஆயிதங்கள் மற்றும் கற்களால் உருவாக்கப்பட்ட கோடாரிகள் தயாரிக்கப்பட்டதர்கான ஆதாரங்களும் இருக்கின்றன.  குமரி கண்டம் தான் ஆரம்பமா? இன்றும் பலர் வெறும் கற்பனையே என்று கருதி வரும் குமரி கண்டமானது உண்மையாக இருந்தது தான் என்பதற்கும், அங்கே தோன்றிய ஆதி மனிதர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதற்கும் ஒரு துவக்க புள்ளியாக அமைகிறது இந்த ஆய்வு. Image Source: antiquity.ac.uk தாய் மண்! லெமொரியா என்று அறியப்படும் குமரி கண்டமானது கடலுக்கு அடியே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த போன ஒரு பகுதி ஆகும். இந்திய பெருங்கடலுக்கு அடியே ஆழ்ந்த அமைதியில் உறங்கி வருகிறது ஆதி மனிதனை பெற்றெடுத்த தாய் மண் குமரி கண்டம். ஆதாரம்! இந்த குமரி கண்டமானது ஆசுதிரேலியா மற்றும் ஆப்ரிக்காவை இணைத்து நடுவே அமைந்திருந்த பெரிய கண்டமாகும். இதைத்தொட்டு இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழன் ஆதி மனித இனத்தில் இருந்து தோன்றியவன் என்பது வெகுவிரைவில் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.