குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, தை(சுறவம்) 18 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடு(நட்சத்திர) விடுதியாக மாறும் சனாதிபதி மாளிகை!மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவரையும் மன்னிக்க

20.01.2049-  02.02.2018-முடியாது! சனாதிபதி   மைத்தி ரி அவர்கள்  ஆதங்கம். மீண்டும் கோத்தாவின் கோரிக்கை நிராகரிப்பு! யாழ். காங்கேசன்து றையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சனாதிபதி மாளிகையை ஆடம்பர உடு விடுதியாக மாற்ற அரசாங்கம் தீர்மா னித்துள்ளது.இதற்கு அமைய மாளிகையை விடுதியாக மாற்ற சர்வதேச கேள்வி மனுக்கள் அடுத்த சில வார ங்களில் கோரப்பட உள்ளன.

 

காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சனாதிபதி மாளிகைக்கு தற்போது சுமார் 300 கோடி ரூபா செலவாகியுள்ளதாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்சனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க 300 கோடி ரூபா செலவாகியுள்ளது. அதனை விடுதியாக மாற்ற சர்வதேச கேள்வி மனுக்களை கோரவுள்ளோம்.

சனாதிபதியின் செலவுகளில் 90 வீதத்தை நான் குறைத்துள்ளேன். பணியாளர்கள், விமான பயணங்கள், இணைப்புச் செயலாளர்கள் போன்றவற்றையும் நான் குறைத்துள்ளேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

யாழ். சனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் காங்கேசன்துறையில் எந்த சனாதிபதி மாளிகையும் நிர்மாணிக்கப்படவில்லை என முன்னாள் சனாதிபதி மகிந்த ராயபக்ச கூறியிருந்தார்.

1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அழிக்கும் வரை யாழ். கோட்டையில் சனாதிபதி மாளிகை ஒன்று இருந்தது எனவும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவது சனாதிபதி செயலகத்தின் கீழ் வரும் சர்வதேச தொடர்புகளுக்கான மத்திய நிலையம் எனவும் நிர்மாணிப்பு பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் மகிந்த ராயபக்ச குறிப்பிட்டிருந்தார்.

காங்கேசன்துறை மற்றும் அருகம்மை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள் சனாதிபதி மாளிகைகள் அல்ல எனவும், அவை சர்வதேச மாநாட்டு நிலையங்கள் எனவும் இவற்றில் தங்குமிடங்கள் இருப்பதே ஏனைய மாநாட்டு நிலையங்களில் இருந்து வேறுப்படுவதாகவும் முன்னாள் சனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் சனாதிபதியாக பதவி வகிக்கும் நோக்கத்தில் இருந்து வந்த மகிந்த ராயபக்ச, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களிலும் சனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவரையும் மன்னிக்க முடியாது! சனாதிபதி ஆதங்கம்

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய எவரையும் மன்னிக்க முடியாது எனசனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப்பாவி தொழிலாளர்களின் ஊழியர்சேமலாப நிதியம்2008 ஆம் ஆண்டு முதலே பாரியளவில்கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சனாதிபதி கூறியுள்ளார்.

பிபிலை, மெதகம பிரதேசசபை விளையாட்டரங்கில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது சனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளில் உள்ளடங்கியுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்தி ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

அதற்கு எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மக்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகின்றது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய எவரையும் மன்னிக்க முடியாது. மத்திய வங்கி ஊழல், மோசடி பற்றிய அறிக்கையில் 2015-2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன.

எனினும், அப்பாவி தொழிலாளர்களின் ஊழியர்சேமலாப நிதியம்2008 ஆம் ஆண்டு முதலே பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” எனசனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கோத்தாவின் கோரிக்கை நிராகரிப்பு!

அவன்கார்ட் வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராயபக்சவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கோத்தபாய ராயபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியை பெறாது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிராக கோத்தபாய ராயபக்சவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அல்லது ஆணைக்குழு சார்பாக எவரேனும் ஒருவர் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை என மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய கோத்தபாய இராயபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி, கொழும்பு பிரதம நீதவானால் வழங்கப்பட்ட உத்தரவு சட்டரீதியானது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.