குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2049

இன்று 2018, ஐப்பசி(துலை) 18 ம் திகதி வியாழக் கிழமை .

கோத்தாபய ராயபக்ச நாடு திரும்பும் போது கைதுசெய்யப்படுவார் – ராயித சேனாரத்ன!

19.01.2049-01.02.2018-உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராயித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகரவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சிறிலங்கா பொதுயன முன்னணியின் அடுத்த சனாதிபதி தேர்தல் வேட்பாளரான கோத்தாபய ராயபக்ச, கைது செய்யப்படும் அச்சத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உக்ரேனிடம் மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணைகளில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தே கோத்தாபய ராயபக்ச அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவர் வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர், வரும் 12ஆம் திகதி, நாடு திரும்பவுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கோத்தாபய ராயபக்ச சிறைக்கு அனுப்பப்படுவார் என அவர் தெரிவித்தார்.

மிக் போர் விமானக் கொள்வனவின் மூலம் கிடைத்த நிதி, கொங்கொங் வங்கிகளில் ஐந்து இந்தியர்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.